2030ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகள் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2030ஆம் ஆண்டுக்குள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள்காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில்தள்ளப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவஅலுவலகம் தெரிவித்துள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள், உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஆண்டுக்கு சுமார் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் என அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பேரிடர் அபாயக் குறைப்புக்கான உலகளாவிய கலாசாரத்தை உருவாக்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 13 ஆம் திகதிசர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தைக் கடைப்பிடிக்கிறது.

ஒற்றுமையின் மூலம் மட்டுமே உலகைப் பாதுகாப்பானதாக மாற்ற முடியும்என்பதே சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தின் கருப்பொருளாகும்.

Share this Article