நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 11ஆம் தேதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைய வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் நாள் நெருங்கி வருவதால் முக்கிய கட்சிகள், பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் இறுதிக்கட்ட பிரசார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
11ஆம் தேதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகள் முடிவடைவதுடன், 12 மற்றும் 13ஆம் தேதிகளில் எந்த வேட்பாளரும் அல்லது கட்சியும் பிரசார நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நாட்களை அமைதிக்காலமாக கருதி அனைவரும் அதன்படி செயல்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
சில மாவட்டங்களில் சீரற்ற காலநிலையால் தேர்தல் பிரசாரங்கள் பாதிக்கப்பட்டாலும், பல இடங்களில் சுமூகமாக நடைபெற்று வருகின்றன.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடும்போது பொதுத் தேர்தலில் பிரசாரங்கள் அதிகமான தீவிரம் இல்லையென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.