சைபர், நிதி மோசடியை எதிர்கொள்ள நேர்ந்தால், உடனடியாக குற்றத் தடுப்புவிசாரணை திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவுக்கு முறைப்பாடுசெய்யுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. அதற்கிணங்க சம்பந்தப்பட்ட முறைப்பாட்டை dir.ccid@police.gov.lk என்றமுகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.
மக்கள் தமது சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, அதன் உத்தியோகத்தர்களின் நிரந்தர பாதுகாப்பு முறைமையைபின்பற்றுவது சிறந்தது என்றும் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமது சமூக ஊடக கணக்கு வேறு ஒரு நபரின் செயற்பாட்டிற்கு இலக்காவதைதடுப்பதற்காக, தமது தொலைபேசி இலக்கம் அல்லது குறித்த கணக்குக்குகிடைத்துள்ள இரகசிய இலக்கம் ஆகியவற்றை வெளி தரப்பினருக்குஅனுப்புவதற்கு முன்பதாக அவர்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் திணைக்களம் மேலும் கேட்டுள்ளது.