வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சர்வதேச கிரிக்கெட்மைதானம் அமைப்பதற்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாகவும் அதனுடைய தற்போதைய நிலைமை தொடர்பாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பெப். 16) யாழ் வந்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் விவகார மற்றும்விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே அவர்களும் யாழ்ப்பாணமாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வேலணை பிரதேசசெயலாளர் க.சிவகரன் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதன்போது யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கினை பார்வையிட்டதுடன் , துரையப்பா விளையாட்டு அரங்கின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
குறிப்பாக ஒளியமைப்பு வசதிகள் ,பராமரிப்பு வசதிகள் மற்றும் உள்ளக அரங்குஅமைப்பதுதொடர்பாகவும் ஆராய்ந்ததோடு இதற்கான திட்ட முன்மொழிவுபொறிமுறை ஒன்றினை உருவாக்கித் தருமாறு கெளரவ அமைச்சர் அவர்கள் அரசஅதிபரிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.