வெள்ள அனர்த்தத்திற்குப் பிந்திய காலத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகமாக உள்ளதனால் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த. வினோதன் அறிவுறுத்தியுள்ளார்.
இக்கூற்றை அவர் கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெருமளவானோர் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தனர். வெள்ள நீரில் பயணம் செய்த அவர்களுக்கு, அந்த நீரில் கலந்த எலியின் சிறுநீரால் பக்ரீறியா தொற்று ஏற்பட்டு எலிக்காய்ச்சல் உருவாக வாய்ப்பு உள்ளது.
அதனால், கடுமையான காய்ச்சல், கால் வலிப்பு, கண் சிவப்பு போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியைப் பெறுமாறு அவர் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.