வெளிநாட்டு உணவகங்களின் வருகை எம் பாரம்பரிய உணவுகளை ஊரங்கட்டிவிடும் என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சிறுதானியப் பொங்கல் விழா கடந்தஞாயிற்றுக்கிழமை (பெப்.16) ஊரெழு வளர்பிறை சனசமூக நிலைய முன்றலில்நடைபெற்றபோது பொ.ஐங்கரநேசன் அவர்களது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது உரையில் ….
ஒரு இனத்தின் தேசிய அடையாளங்களில் உணவுப் பண்பாடும் ஒன்று. தேசியத்தைக் கட்டமைப்பதில் பண்பாட்டின் ஏனைய கூறுகளைப்போன்றுஉணவுப் பண்பாடும் காத்திரமான பங்களிப்பைச் செய்கிறது. ஆனால், மதப்பண்பாட்டில் பௌத்தத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்ற நாம், உணவுப் பண்பாட்டில் நிகழும் ஆக்கிரமிப்புகள் குறித்துக் கண்டுகொள்ளாமல்இருக்கிறோம். அண்மைக்காலமாக வெளிநாட்டு உணவகங்கள் பல இங்குகிளைகளைத் திறந்துகொண்டிருக்கின்றன. எமது உணவுப் பண்பாட்டில்திணிக்கப்படும் மாற்றங்கள் பற்றி நாம் விழிப்படையாவிட்டால் வெளிநாட்டுஉணவகங்கள் எமது பாரம்பரிய உணவுகளை மேலும் ஓரங்கட்டிவிடும். எமதுஆரோக்கியமும் மேலும் வீழ்ச்சியடையும்.
நெல் அரிசிச் சோற்றின் வருகையுடனேயே எமது உணவுத் தட்டுகளில் இருந்துசாமை, வரகு, கம்பு, குரக்கன், குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள்ஓரங்கட்டப்பட்டன. நெல் அரிசியுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்கள் அதிககலோரிப் பெறுமானம் கொண்டவை. அதிக நார்ச்சத்து உடையவை. அதிகஅளவில் மாப்பொருளையும் புரதத்தையும் விற்றமின்களையும் கனியுப்புகளையும்கொண்டவை. மேலதிகமாக, புற்றுநோய் எதிர்ப்புச் சேர்வைகளையும்கொண்டிருக்கின்றன. இவற்றால்தான் எமது முன்னோர்கள் தேகஆரோக்கியத்துடன் நூற்றாண்டைக் கடந்தும் வாழ்ந்தார்கள்.
சூழலியல் நோக்கிலும் நெல்லைவிட சிறுதானியங்களே முதன்மை பெறுகின்றன. நெல் பயிரிடுவதற்கு ஈரமான தரையும் அதிகளவில் நீர்ப்பாசனமும்தேவைப்படுகிறது. ஆனால், சிறுதானியங்கள் வறண்ட சூழலிலும் குறைந்தநீர்த்தேவையுடன் வளரக்கூடியவை. நெல் நோய்களினதும் பீடைகளினதும்தாக்கத்துக்கு அதிகளவில் ஆளாகும்போது சிறுதானியங்கள் இவற்றுக்குஎதிராகத் தாக்குப் பிடிக்கின்றன. காலநிலை மாற்றம் எம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் சிறுதானியங்களை நோக்கி நாம் திரும்புவதுகாலத்தின் கட்டாயமாக உள்ளது.
எமது இளைய தலைமுறை பாரம்பரிய உணவுகளை நாகரிகமற்றதொன்றாகக்கருதும் மனப்பாங்கைக் கொண்டிருக்கின்றது. துரித உணவகங்களையே அதிகம்நாடுகிறார்கள். கொத்து ரொட்டியையும், பிஸ்ஸாவையும், ப்ரைட் றைஸ்சையுமேவிரும்புகிறார்கள். மென்பான நிறுவனங்களின் விளம்பரங்களில் மயங்கி இந்தஉணவுகளோடு சேர்த்து ஆபத்தான மென்பானங்களையும் அருந்தி வருகிறார்கள். தேசியம் என்பது வெறும் அரசியல் சொல்லாகியுள்ள இன்றைய சூழ்நிலையில்உணவுப் பண்பாட்டுத் தேசியம் பற்றிய புரிதலை எமது மக்களிடம் ஏற்படுத்துவதுஅவசியம் .