வங்கிகளில் நிலையான வட்டி வீதத்தில் ஒப்பந்தம் செய்து கடன் பெற்றவர்களின் ஒப்பந்தத்தை மீறி அனைத்து வங்கிகளுமே வட்டி வீதங்களை அதிகரித்துவிட்டன என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
நிலையான வட்டி வீதத்தில் ஒப்பந்தம் செய்து கடன் பெற்றவர்களின் ஒப்பந்தத்தை மீறி அனைத்து வங்கிகளுமே வட்டி வீதங்களை அதிகரித்துவிட்டன.
வங்கிகள் கூறியதை போன்று செயற்படவில்லை. இவர்கள் தற்போது வழங்கும் வாக்குறுதிகளையும் நாம் நம்ப முடியாது.
இந்த நடவடிக்கையால் தனியார்துறை தொழிலாளர்கள், ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள் பெரும் தோட்ட தொழிலாளர்கள் என அனைவரும் பாதிப்படைவார்கள். இதனால் சேமலாபா நிதியின் வீதமும் குறையும் என்று அவர் தெரிவித்தார்.