மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் காணாமல் போன நிலையில் ஒரு மீனவர் சடலம் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட மீனவர் பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான விசுவா (வயது-57) என தெரிய வந்துள்ளது.
காணாமல் போன மற்றைய மீனவரான பரப்பாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த விசுவாசம் சந்திரகுமார் பர்னாந்து (வயது-37) என்ற மீனவரை தேடி வருகின்றனர்.
இரு மீனவர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வள்ளம் ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் வள்ளம் நீரில் மூழ்கியுள்ளது.