யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டு நிறைவினை முன்னிட்டு அதன் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களில் ஒரு நிகழ்வாக சுகநல மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடைபவனி நேற்று (டிசம்பர் 3) நடைபெற்றது.
இணைந்த சுகநல விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதி தெய்வி தபோதரன், விளையாட்டு விஞ்ஞான அலகின் தலைவர் கலாநிதி சி. சாஆனந்த் மற்றும் விரிவுரையாளர்கள் கூட்டாகக் கொடியசைத்து ஆரம்பித்து வைத்த இந்த நடை பவனி பிறவுண் வீதி, இராமநாதன் வீதி, கே.கே.எஸ் வீதி, வைத்தியசாலை வீதி, பலாலி வீதி ஊடாகச் சென்று பல்கலைக்கழகத்தின் பிரதான வளாக முன்றலை அடைந்தது. அங்கிருந்து நகர்ந்த நடைபவனி பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்வில் விளையாட்டு விஞ்ஞான அலகின் பழைய மாணவர்கள், விரிவுரையாளர்கள், போதனாசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.