யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்றையதினம் (ஜனவரி19) அதிகாலை வீசியமினி சூறாவளி காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என். சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குருநகர் ஜே /68 மற்றும் ஜே /69 கிராம சேவையாளர் பிரிவுகளில் 49 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூவர்காயமடைந்துள்ளனர்.
அதேவேளை 49 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளதுடன் சேத விபரங்கள்மதிப்பீடு செய்யும் பணிகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால்மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மேலும் தெரிவித்தார்.