யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு 175 இற்கு மேற்பட்டோர் விபரித முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளனர் என வைத்திய கலாநிதி.சிவதாஸ் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (ஜூன் 9) காலை இடம்பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களுடனான கலந்துரையாடலில் இவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இளந்தலைமுறையினருக்கு பொழுது போக்குகளும் ஓய்வுள்ள நேரத்தை கழிப்பதற்கான வழிமுறைகள் இன்மையே தற்போது இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு காரணம்.
முன்னைய காலத்தில் சமூகம் மிகுந்த பலமாக இருந்தாலும் தற்போது காணப்படும் சமூகம் மிகவும் பலவீனமானது பாடசாலையுடனும் குடும்பத்துடனும் நல்ல இணைப்பிலுள்ள மாணவர்கள் எவ்விதமான பிறழ்வான நடத்தைகளுக்குள்ளும் அகப்படுவதில்லை.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு 175 இற்கு மேற்பட்ட தற்கொலைகள் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பணமும் பெருமளவான நடுத்தரவளவு குடும்பங்களின் பேராசைத் தன்மையுமே பெரும்பாலான பிரச்சினைக்கு வழி வகுக்கின்றது எனவும் சுட்டிக் காட்டினார்.