யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்துநடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி– 2025 நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றையதினம் (பெப். 14) யாழ் மத்திய கல்லூரிவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மகளிர் விவகாரம் புனர்வாழ்வளித்தல் ,சமூகசேவைகள்,கூட்டுறவு ,உணவு வழங்கலும் விநியோகமும் தொழிற்துறையும்தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தகமும் வாணிபமும் மாகாணஅமைச்சின் செயலாளர் பொ.வாகீசன்,அவர்களும் சிறப்பு விருந்தினராகFAIRMED செயற்றிட்ட தலைவர் திருமதி.ஞானரதன் பிரியரஜினி,அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தும் வகையில் மாவட்ட மட்டத்தில்இத் தடகள விளையாட்டுப்போட்டி இடம்பெற்றது.
7 வகையான மாற்றுத்திறனாளிகள் தெரிவு செய்யப்பட்டு 87 வகையானவிளையாட்டுக்கள் நடைபெற்றன.
இவ் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப்போட்டியில் நல்லூர் பிரதேச செயலகம் முதலாவது இடத்தினையும், பருத்தித்துறை பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், சண்டிலிப்பாய்பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கான
மாவட்ட தடகள விளையாட்டு போட்டியில் வெற்றியீட்டிய விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிக் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டது.