வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டுக் கூடத்தின் ஏற்பாட்டில், யாழ் புதிய கச்சேரிக்கு முன்பாகவுள்ள சிதைவடைந்த பழைய கச்சேரி வளாகத்துக்குள் நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 15) சனிக்கிழமை மாலை 3 மணிக்கு அகங்கனலி கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய, இளம் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.