மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி நிகழ்வுகள் இன்று (பெப் 13) வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன.
தமிழ் ஊடக உலகில் 40 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்ற மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (பெப் 09) யாழ்ப்பாணத்தில் மறைந்தார்.
அன்னாரின் உடல், பலாலி வீதியில் திருநெல்வேலியில் (திண்ணை ஹோட்டலுக்கு முன்னால்) அமைந்துள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை இறுதி கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும். அதன் பின்னர் மதியம் 1 மணியளவில் புகழுடல் தகனக் கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.