முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தேசிய விமானப் போக்குவரத்து சேவைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகாரணமாக நேற்று (ஜூலை30) பிரித்தானிய தலைநகர் லண்டன் வான்வெளிமுழுமையாக மூடப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையால் இங்கிலாந்திலிருந்து புறப்படும் அனைத்துவிமானங்களும் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளன.

இதனால் விமான நிலையங்களில் பயணிகளுக்கு கடுமையான இடையூறுஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானங்கள் தாமதமாகின அல்லதுஇரத்து செய்யப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு தீர்க்கப்பட்டு லண்டன் பகுதியில்இயல்புநிலை செயல்பாடுகளை மீட்டெடுத்ததாக NATS பொறியாளர்கள்தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையால் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்க விமானநிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுடன் இணைந்து பணியாற்றிவருவதாக NATS தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு NATS மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சம்பவம் முக்கியமாக லண்டனில் உள்ள ஹீத்ரோ, கேட்விக், ஸ்டான்ஸ்டெட், லூடன், சிட்டி மற்றும் சவுத்எண்ட் ஆகிய ஆறு முக்கியவிமான நிலையங்களை பாதித்துள்ளது.

தற்போதைய பிரச்சினை விரைவாக தீர்க்கப்பட்டாலும், முழுமையானஇயல்புநிலை திரும்பும் வரை சிறிது தாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article