முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

தனது இராஜினாமா கடிதத்தை மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுநர் மாளிகையின் செயலாளர் மூலமாக மு.க.ஸ்டாலின் இராஜினாமா கடிதம் பெறப்பட்டு, ஆளுநரிடம் கொடுக்கப்படவுள்ளது.

அதனையடுத்து, கடிதத்தை பெறும் ஆளுநர், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார். அதனையடுத்து, த.வெ.க அதன் தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.

நேற்று வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகம் பெருவாரியான வெற்றி பெற்றது. இருப்பினும், தனிப்பெரும்பான்மை ஆட்சியை அமைக்க இன்னும் 10 இடங்கள் அக்கட்சிக்கு தேவைப்படுகிறது.

விரைவில் சட்டசபையை கூட்டி த.வெ.க தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும். இதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பிற கட்சிகளுடன் த.வெ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Share this Article
Leave a comment