ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணத்தின் வாக்கு எண்ணும் நிலையமாக இருக்கும் நிலையில், மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புகள் தொடர்பில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (செப் 16) கள ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வில் மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொதுச் சுகாதார வசதிகள், நலனோன்பு உபசரிப்புகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை ஆராயப்பட்டதுடன், தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கலாய்வில் உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமல்ராஜ், வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு ஏ. ஜே. ஹாலிங்க ஜெயசிங்க, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.