மகனின் கத்திக் குத்துக்கு இலக்காகி தந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று மாவனெல்ல பிரதேசத்தில் இன்று (டிசம்பர் 26) மாலை நடந்துள்ளது.
42 வயதுடைய ஜனப்பிரிய தர்மசேன என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவர்.
தந்தை மது அருந்திவிட்டு தினமும் தாயைத் தாக்குவதை வழமையாக கொண்டிருந்த நிலையில், சம்பவ தினத்தன்றும் மது போதையில் தாயைத் தாக்கியுள்ளார்.
இதனால் கோபமடைந்த 20 வயதுடைய மகன் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.