516 ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளுடன் எம்.வி. “சில்வர் ஸ்பிரிட்’ கப்பல் இன்று (26) திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பல் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான அஷ்ரப் இறங்கு துறையை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை துறைமுகத்துக்கு அதிக உல்லாசப் பயணிகளுடன் வந்த பெரிய பயணிகள் கப்பல் இதுவென்று துறைமுக அதிகார சபையின் முகாமையாளர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலில் இலங்கை வந்த உல்லாசப் பயணிகள் திருகோணமலை, சிகிரிய, தம்புள்ள, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களுக்கு ஒரு நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு அதன் பின்னர் தாய்லாந்து நோக்கி செல்லவுள்ளதாக முகாமையாளர் சமன் பெரேரா தெரிவிக்கின்றார்.