போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி !
போப் பிரான்சிஸ் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) அவர்கள் மூச்சுக்குழாய் அழற்சிக்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக ரோமில்உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கன்தெரிவித்துள்ளது.
சமீப நாட்களாக மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போப் தனதுஉரைகளைப் படிக்க அதிகாரிகளை நியமித்திருந்தார்.
இந்நிலையில் காலை நேரக் கூட்டத்திற்கு பின் ரோமின் ஜெமெல்லிவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுவயதிலேயே தனது நுரையீரலின் ஒரு பகுதியை அகற்றிக் கொண்ட போப், கடந்த சில நாட்களாக சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக இதே வைத்தியசாலையில் குடல் அறுவை சிகிச்சைக்காக கடந்த2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 10 நாட்கள் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் அதே வைத்தியசாலையில் அவருக்குகுடலிறக்கத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றதுகுறிப்பிடத்தக்கது.