அரச அலுவலகங்களுக்குப் பிரவேசிக்கும் பொதுமக்களின் தேவைகளைவிரைவாக நிறைவேற்ற வேண்டியது அரச அதிகாரிகள் கடமை என வடக்குமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண நிதி திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்குதுறை உள்ளிட்ட பலதுறைசார் அமைச்சசுக்களின் மீளாய்வுக் கூட்டத்தில் வைத்து அவர் இதனைக்கூறியுள்ளார்.
அரச அலுவலர்கள் பொதுமக்களைத் தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கும் வகையில்செயற்படக் கூடாது.
மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் ஆளுநர் அலுவலகத்துக்குப்பிரவேசிக்கின்றார்கள்.
அந்த நிலைமையை மாற்றியமைக்கும் வகையில் ஒவ்வொரு அலுவலகங்களும்வினைத்திறனாக பணியாற்றவேண்டும் என வடமாகாண ஆளுநர்தெரிவித்துள்ளார்.