வியாழக்கிழமை 20/02/2025 மதியம் 12.00 மணி வானிலை அவதானிப்பு..
எதிர்வரும் 23.02.2025 க்கு பின்னர் வங்கக்கடலில் உருவாகவுள்ளகாற்றுச்சுழற்சியின் காரணமாக பெப்ருவரி 25 தொடக்கம் மார்ச் 02 வரை நாடுமுழுவதும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பெப்ருவரி 27, 28 மார்ச் 01 ஆகிய தேதிகளில் வடக்குகிழக்கில் கனமழை பெய்யக் கூடும். இது இவ்வாண்டில் பெய்கின்ற இரண்டாவதுகனமழையாக அமையும் என்று ECMWF தரவுகள் காட்டுகின்றன.
எனவே பெரும்போக விதைப்பினைத் தாமதமாக மேற்கொண்டு அறுவடைக்காகக்காத்திருப்போர் மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்இவ்விடயத்தை கருத்தில் கொள்ளவும். (இயற்கை கணப்பொழுதில் மாறக்கூடியது)