புற்றுநோய் தடுப்பூசி கண்டுபிடிப்பு – ரஷ்யா!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 

ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய்க்கு எதிரான தனது சொந்த ‘mRNA’ தடுப்பூசியைஉருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தடுப்பூசி 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதாரஅமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர்ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்து உள்ளார்.

ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் கடைசி கட்டஆய்வு உள்ளதாகவும், கடைசி பரிசோதனை நடந்து வருவதாகவும் விரைவில் இதுநோயாளிகளுக்கு கிடைக்கும் என்றும் அந்நாட்டு அரசு மேலும், தெரிவித்துஉள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே புடின் இது தொடர்பாக ஊடகங்களில்பேசுகையில், புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரிமருந்துகளை நாங்கள் உருவாக்கி உள்ளோம்.

இதன் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இவைமக்களுக்கு கிடைக்கும், என்று தெரிவித்திருந்தார். விரைவில் இது மக்கள்பயன்பாட்டிற்கு வரும்.

இவை மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனைகொடுக்கும், கேன்சர் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் என்றும் அவர்தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article