நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது.
நவம்பர் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகத்தால் இது வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய , நவம்பர் 16 ஆம் திகதி முதல் சாதாரண தர, உயர்தர பிரத்தியேக (Tuition) வகுப்புகளை 50% திறனில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
👉1/3 பங்கினருடன் கூட்டங்களை முன்னெடுக்கலாம்.
ஒரு நேரத்தில் உணவு விடுதிகளுக்குள் அதிகபட்சமாக 75 பேரும், வெளியே 100 பேரும் உணவருந்த அனுமதிக்கப்படுவார்கள்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய தொடர் அறிவுறுத்தல்களின்படி,
கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் நவம்பர் 1 ஆம் திகதி முதல் அனுமதிக்கப்படும்.மேலும் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் மதச் சடங்குகள் போன்றவைகளில் முன்னர் அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அமையவே செயற்பட வேண்டும்.