நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாய அபிவிருத்தி செயற்திட்ட காணிகள் சிலவற்றிற்கு வேலிகள் அமைப்பதற்கு பனைமட்டைகள் பெருமளவில் தேவையாகவுள்ளதால் . தகுந்த முறையில் வெட்டி தரப்படும் பனை மட்டை ஒன்று 5.00 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது.
மேலும் பனைசார் உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாக பனம் விதைகள் கொள்வனவு செய்யப்படவுள்ளது. தலா ஒவ்வொரு பனம் விதைகளுக்கும் 3.00 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.
விவசாய நடவடிக்கைகளுக்கு மாட்டெரு, ஆட்டெரு என்பன தேவையாகவுள்ளபடியால் இவற்றையும் இவை ஓர் உழவு இயந்திரப் பெட்டி அளவில் மாட்டெரு 2000.00 ரூபா வீதம் ஆட்டெரு 3000.00 வீதம் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
எனவே பனைமட்டைகள், பனம் விதைகள், எரு என்பவற்றை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (Nov 5.2021) முன்னதாக சேகரித்து தரப்படின் அதற்கான தொகைப் பணமானது உடன் வழங்கப்பட்டு அவை கொள்வனவு செய்யப்படவுள்ளது என ஊரும் உறவும் அமைப்பினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றிற்கான கொள்வனவு நிலையங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
👉 குறிப்பு:- பனைமட்டைகள், பனம் விதைகள், எரு என்பன ஏற்கனவே தயாராக வைத்திருப்பவர்கள் ஊரும் உறவும் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு உடனடியாக தெரியப்படுத்துவதன் மூலம் அவற்றை முன்னுரிமை அடிப்படையில் கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்யப்படவுள்ளது
தொடர்புகளிற்கு
விவசாய, சுற்றுச்சூழல் மேம்பாட்டுப்பிரிவு,
நெடுந்தீவு ஊரும் உறவும்(DO-U) 94 (77) 840 0534