முன்னாள் அமைச்சராகிய டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம்(நவம்பர் 25)கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
மேலும் வழக்கு ஒன்றினில் சாட்சியமளிப்பதற்கு முன்னிலையாகாதகாரணத்தினால் முன்னாள் அமைச்சராகிய டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராகபிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, இன்றையதினம் தனது சட்டத்தரணிகள் ஊடாக அவர்நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து அவருக்கு எதிரான பிடியாணைஉத்தரவை நீதிமன்றம் மீளப் பெற்றுள்ளது.
2016 ஆம் ஆண்டு, தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான 02 காசோலைகளைவழங்கியமை தொடர்பாக , வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர்ஒருவருக்கு எதிராக டக்ளஸ் தேவானந்தா வழக்கொன்றை தாக்கல்செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு நீதிமன்றத்தில்முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த வழக்கு தவணைக்குமுன்னிலையாக தவறிய காரணத்தால் அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவுபிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில், மருத்துவ காரணங்களினால் தாம் வழக்குத் தவணைக்குமுன்னிலையாகவில்லை என்றும், மருத்துவச் சான்றிதழ்களையும் நீதிமன்றத்திற்குடக்ளஸ் தேவானந்தா இன்று சமர்ப்பித்திருந்தார்.
இதன் அடிப்படையில் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவுமீளப் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.