பிள்ளையானின் சாரதியை வாழைச்சேனையில் வைத்து கைது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மட்டக்களப்பு வாழைச்சேனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் எனஅழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சாரதியான ஜெயந்தன் என்பவரை நேற்றையதினம் (ஏப்ரல் 18) காலையில் சி..டி.யினர் கைது செய்துள்ளதாகபொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம்ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிகடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 8 ஆம் திகதிபிள்ளையான் அவரது காரியாலயத்தில் வைத்து சி..டி. யினர் கைது செய்துஅவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்துவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையையடுத்து கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தலுடன்தொடர்புபட்ட பிள்ளையானின் சாரதியான ஜெயந்தனை கொழும்பில் இருந்துசென்ற சி..டி.யினர் அவரை அவரது வாழைச்சேனை வீட்டில் வைத்து கைதுசெய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article