பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மத்திய பிலிப்பைன்ஸின் விசயாஸ் பகுதியில், செபு மாகாணத்தின் போகோநகருக்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்றிரவு (செப்.30) இரவுஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 147 பேர்காயமடைந்துள்ளனர்.

இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மீட்பு அதிகாரிகள்எச்சரித்துள்ளனர்.

இதனால் செபு மாகாணத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் வரலாற்று சிற்றாலயங்களுக்கு பலத்தசேதம் ஏற்பட்டுள்ளது.

போகோ நகரில் உள்ள விளையாட்டு அரங்கம் இடிந்து, அங்கு கூடியிருந்தவர்கள்உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

செபு நகரில் சுமார் 10.6 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர். பிலிப்பைன்ஸ் எரிமலைமற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றுஉறுதியளித்துள்ளது.

இருப்பினும் சிறிய கடல் அலை அச்சுறுத்தல் காரணமாக கடற்கரை பகுதிகளைவிட்டு விலக இருந்ததாக அறிவுறுத்தியது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மீட்புப் பணிகள் தொடர்ந்துநடைபெறுகின்றன.

Share this Article