இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் ஜனபிரித் பெர்னாண்டோஉத்தியோக பூர்வமாக நேற்றையதினம் (ஜனவரி05) யாழ் மாவட்ட சாரணர்கிளைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இந் நிகழ்வானது யாழ் மாவட்ட சாரண ஆணையாளர் மருதலிங்கம் பிரதீபன்தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட கிளைச் சங்க உறுப்பினர்கள், உதவி மாவட்ட ஆணையளார்கள்மற்றும் சாரணர்கள் அனைவருடனும் மாவட்ட வளர்ச்சி தொடர்பாககலந்துரையாடினார்கள்.
சாரண ஊடக பிரிவினால் தயாரிக்கப் பட்ட 2023 மற்றும் 2024 யாழ் சாரணன் மடல் வெளியீடும் மாவட்ட ஆணையாளரினால் பிரதம ஆணையாளருக்கு முதல்பிரதி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.