யாழ்ப்பாண மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது கௌரவ பிரதமமந்திரி தினேஸ் குணவர்த்தன அவர்களின் தலைமையிலும் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ்தேவானந்தா அவர்கள் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான திருமதி. பி. எஸ். எம். சார்ள்ஸ் ஆகியோரின் பிரசன்னத்துடன் இன்று (ஜூலை 12) யாழ் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து மாவட்டத்தினுடைய அபிவிருத்திதிட்டங்கள் தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் முன்னேற்ற நிலைமைகள் குறித்து கௌரவ பிரதம மந்திரிஅவர்களினால் பரிசீலிக்கப்பட்டது.
இவ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை பிரதமர் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது கௌரவ பிரதமமந்திரி தினேஸ் குணவர்த்தன அவர்களின் தலைமையிலும் கடற்றொழில்அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ்தேவானந்தா அவர்கள் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும்ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ்ஆகியோரின் பிரசன்னத்துடன் இன்று (12.07.2024) காலை யாழ் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன்அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து மாவட்டத்தினுடைய அபிவிருத்திதிட்டங்கள் தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும்ஆராயப்பட்டதுடன் முன்னேற்ற நிலைமைகள் குறித்து கௌரவ பிரதம மந்திரிஅவர்களினால் பரிசீலிக்கப்பட்டது.
இவ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்,
பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேசசெயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்,மாவட்ட செயலக பதவிநிலைஉத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும்கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அடை காக்கும்கருவி (Incubator) வழங்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட கடற்றொழிலாளர்குடும்பங்களுக்கு அரிசி பொதிகள் என்பன பிரதம மந்திரி அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.