போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5278 மில்லியன் ரூபாசெலவில் கொம்பனித்தெருவுக்கும் நீதிபதி அக்பர் மாவத்தைக்கும் இடையில்புகையிரதப் பாதைக்கு மேலால் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத் திட்டத்தின்இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் (ஜூலை 11) திறந்து வைத்தார்.
நாளாந்தம் 109 புகையிரத பயணங்களுக்கு புகையிரத கடவை மூடப்படுவதால்ஏற்படும் தாமதம் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நோக்கில் வீதிஅபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின்நிர்மாணப்பணிகள் மாகா பொறியியல் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
அரச அலுவலகங்கள், வைத்தியசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைக் கொண்டவர்த்தக நகரப் பகுதியான கொம்பனித்தெரு பிரதேசத்தில் அமைந்துள்ளபுகையிரதக் கடவையால் நாளாந்தம் சுமார் 03 மணித்தியால நேரவிரயம்ஏற்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த மேம்பாலத் திட்டம் நிறைவடைந்ததன் பின்னர்கொம்பனித்தெருவில் இருந்து காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம்நோக்கி போக்குவரத்து நெரிசலின்றி பயணிக்க முடியும். மேலும், வாகன நெரிசல்காரணமாக வீதியில் வீணாகும் மக்களின் நேரத்தை தேசிய பொருளாதாரத்தில்இணைக்க முடியும்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதிபந்துல குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்டஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித்ரூபசிங்க உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கையளிப்பு !
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5278 மில்லியன் ரூபாசெலவில் கொம்பனித்தெருவுக்கும் நீதிபதி அக்பர் மாவத்தைக்கும் இடையில்புகையிரதப் பாதைக்கு மேலால் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத் திட்டத்தின்இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் (ஜூலை11) திறந்து வைத்தார்.