பிஃபா உலகக்கிண்ண அவுஸ்திரேலிய அணியில் இலங்கை தமிழ் வீரர்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பிஃபா உலகக்கோப்பை 2026க்கான தகுதிகான் சுற்றில் இலங்கையைபூர்வீகமாகக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை அவுஸ்திரேலிய தேசிய கால்பந்துஅணியில் இடம்பிடித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை சீனாவுக்கு எதிராக இடம்பெற்ற ஆட்டத்தில், 23 வயதானநிஷான் வேலுப்பிள்ளை தனது முதல் கோலை அணிக்காக நிஷான்வேலுப்பிள்ளை 2019 முதல் அவுஸ்திரேலியாவில் எடிலெய்ட் யுனைடெட்அணிக்காக விளையாடி வருகிறார்.

பிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் அவுஸ்திரேலிய அணிதொடர்ந்து பின்னடைவை வந்த நிலையில், அணியின் மேலாளராக புதிதாகபொறுப்பேற்ற டோனி போபாவிக் வியாழக்கிழமை நடைபெற்ற சீனாவுக்குஎதிரான போட்டியில் நிஷான் வேலுப்பிள்ளையை அணிக்குள்இணைத்துக்கொண்டார்.

அவுஸ்திரேலிய அணிக்காக மாற்று வீரராக போட்டியின் 83ஆவது நிமிடத்தில்களம் நுழைந்த நிஷான் அடுத்த 7 நிமிடத்தில் தனது அறிமுக போட்டியில் முதல்சர்வதேச கோலை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார்.

இந்நிலையில், அவர் அவுஸ்திரேலிய அணிக்காக கோல் அடித்த காணொளியும்வெளியாகியுள்ளது.

 இதற்கிடையே, நிஷான் வேலுப்பிள்ளையின் கோல் மூலம் வெற்றி பெற்றஆஸ்திரேலிய கால்பந்து அணி, ஃபிஃபா உலகக்கோப்பை தகுதி வாய்ப்பைதக்கவைத்துள்ளது

Share this Article