பல கொலைகளுடன் தொடர்புடைய இலங்கையர் கனடாவில் கைது !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் 32 வயதுடைய இலங்கையர் ஒருவர் கனடாவில்

கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2022ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில்தேடப்பட்டு வரும் இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர்எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சந்தேகநபரை கைது செய்ய இலங்கையின் பாதுகாப்புப் படையினர்சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற இவர், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கனடாவுக்கு வந்த போதுகனேடிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான குறித்த இலங்கையர் மேலதிக விசாரணைகளுக்காக பிரான்ஸ்பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கனேடிய பாதுகாப்புதரப்பினர் அறிவித்துள்ளனர்.

Share this Article