நெடுந்தீவினை தூய்மையாக வைத்திருப்போம் எனும் தொனிப்பொருளுக்கிணங்க முதல் வேலைத்திட்டமாக சமூக மட்ட அமைப்புக்களின் பங்களிப்புடன் நெடுந்தீவு பிரதான வீதியின் இருமருங்கினையும் துப்பரவு செய்யும் செயற்திட்டம் இன்று(ஜூலை 18) இடம்பெற்றது.
இன்று (ஜூலை 18) வெள்ளிக்கிழமை காலை முதல் மதியம் வரை நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் சிரமதானம் ஆரம்பிக்கப்பட்டு நெடுந்தீவு பல.நோ.கூ.சங்கம் வரை முதற்கட்டமாக சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இதன்போது நெடுந்தீவில் உள்ள சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் என குறிப்பிட்ட அளவானோர் பங்கெடுத்ததுடன் நெடுந்தீவு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை ஊழியர்களும் இதில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செயற்திட்டம் தொடர்ச்சியாக நெடுந்தீவு மேற்கு வரை நடைமுறைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.