ஆயர் கிண்ணம் தொடருக்கான ஐந்து அணிகளினதும் சீருடைகள் அறிமுகநிகழ்வு பங்குத்தந்தை தலைமையில் நெடுந்தீவு பங்குப்பணிமனையில்எதிர்வரும் ஓகஸ்ட் – 14 இடம்பெறும்.
இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட் மாத்தின் 15.16.17.22.23.24 ஆகிய திகதிகளில்காலை 09:00 மணிமுதல் 02:00 மணி வரையில் கிரிக்கெற்சுற்றுத்தொடர்களும் மாலை 03:00 மணிமுதல் 05:00 மணி வரையில்கிளித்தட்டு தொடரும் யாழ் நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில்இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தின் 11 ம் திகதி மாலை 02:00 மணிக்கும் செப். 12.13 ஆகிய தினங்களில் காலை 09:00 மணிமுதல் 04:00 மணிவரையில்உதைபந்தாட்ட தொடர் யாழ் நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில்இடம்பெறவுள்ளது.
குறித்த செப். 12.13 ஆகிய தினங்களில் மாலை 05:00 மணிமுதல் 8:00 மணிவரையில் கரப்பந்தாட்ட தொடரானது புனித யுவானியார் ஆலய வளாகத்தில்இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் செப்ரெம்பர் (09) மாதத்தின் 14 ஆம் திகதி அனைத்துவிளையாட்டுக்களினதும் இறுதி தொடர் மற்றும் BISHOP CUP 2025 கிண்ணத்திற்கான பரிசளிப்பு நிகழ்வும் யாழ் நெடுந்தீவு மகாவித்தியாலயமைதானத்தில் இடம்பெறவுள்ளது.