வேலணை பிரதேச சபைக்குட்பட்ட சாட்டி கடற்கரையில் கரையொதுங்கி காணப்படும் கடற் சாதாளைகள் விரைவில் அகற்றப்பட்டு, கடற்கரை சுத்தமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த கடற்சாதாளைகள் தாவர வளர்ச்சிக்குப் பயனளிக்கும் இயற்கை பசளையாக பயன்படக்கூடியவையாக இருப்பதால், அவற்றை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் முடிவை பிரதேச சபை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கை வரும் ஆடி அமாவாசை தினத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளதால், கடற்சாதாளைகளை பெற்றுக்கொள்ள விரும்பும் பொதுமக்கள், வேலணை பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தை அணுகி, தேவையான கட்டணங்களை செலுத்தி பதிவுசெய்து, அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.
கட்டண விவரங்கள்:
-
உழவு இயந்திர பெட்டி அளவுக்கான சாதாளையின் விலை – ரூ. 500.00
-
வாகனத்தில் ஏற்றும் கூலி – ரூ. 500.00
-
வேலணை உப அலுவலக பிரதேச எல்லைக்குள் வாகனக் கூலி – ரூ. 1500.00
வேறு இடங்களுக்கு வாகன வசதி வழங்கப்படமாட்டாது. இருப்பினும், கொள்வனவாளரின் சொந்த வாகனத்தில் சாதாளையை ஏற்றுவதற்கான சேவை வழங்கப்படும்.