நெடுந்தீவு நண்பர்கள் வட்டத்தின் உபதலைவர் அமரர் பு.துஷ்யந்தன் (சதீஸ்) அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24) அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.
நெடுந்தீவு மத்தி எட்டாம் வட்டாரத்தினைப் பிறப்பிடமாக கொண்ட இவர் நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூர்யில் தனது ஆரம்பக் கல்வியினையும், தொடர்ச்சியாக நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் உயர்தரக் கல்வியினையும் பயின்றர்.
நெடுந்தீவு மண் மீதும் மக்கள் மீதும் அளவு கடந்த அன்பு கொண்ட இவர் கொழும்பில் வாழ்ந்த போதும் நெடுந்தீவிற்கு தன்னாலான உதவிகளை மேற்கொண்டு வந்தார்.
நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து பல சமூகப்பணிகளையும் குறிப்பாக கல்விப்பணிகளையும் மேற்கொண்டு வந்தார். நெடுந்தீவில் நடைபெறும் நிகழ்வுகளிற்கு தன்னால் முடிந்தளவு கொழும்பில் இருந்து வருகை தந்து கலந்து கொள்ளுவார்.
புனித யுவானியார் ஆலயம் மற்றும் புனித யுதேயா ஆலயங்களிலும் இவரது சேவைகள் காணப்பட்டது. இத்தலங்களின் திருத்த வேலைகளில் பல பங்களிப்புக்களை வழங்கியிருநததர்.
நீண்ட காலமாக கொழும்பில் கட்டிட நிர்மானத்துறை சார்ந்த வேலைத்திட்டங்களை மேற்கொண்;டு வந்தார். யாழ்ப்பாணம் மற்றும் நெடுந்தீவில் இருந்து கொழும்பிற்கு செல்பவர்கள் பலருக்கு பல உதவிகளை மேற்கொண்டு அவர்களுடன் தொடர்ச்சியாக நட்பினை பேணி வந்தார்.
அவரது இழப்பு நெடுந்தீவிற்கு பெரும் இழப்பாக காணப்படுவதுடன் அவரது ஆத்மா சாந்தியடை வேண்டுகின்றோம்.
அன்னாரின. நல்லடக்கம் நாளை (ஜனவரி 27) இடம்பெறும்.