தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு கிளையின் உபசெயலாளருக்கு பயங்கரவாதஒழிப்பு தடுப்பு பிரிவு – கிளிநொச்சி கிளையில் நாளையதினம் (டிசம்பர் 30) விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவீரர் நாள் சம்பந்தப்பட்ட விசாரணைக்காக வருமாறு தொலைபேசி மூலம் தமக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், நெடுந்தீவு பொலிஸ் நிலையம் ஊடாக வழங்கப்பட்ட தகவல் அறிக்கையில் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பிலான விசாரணைக்கு வாக்குமூலம் வழங்க வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு 13 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த உதயகுமார் மதுவண்ணன் என்பவரே இவ்வாறு நாளையதினம் பி. ப 2.00 மணிக்கு வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரவாத ஒழிப்பு தடுப்பு பிரிவு – கிளிநொச்சி கிளைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.