நெடுந்தீவு பிரதேசத்தின் நிலமைகள் தொடர்பில் ஆராயும் வகையில் நேற்றையதினம் (ஜூலை 18) கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நெடுந்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது மீனவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன்மறுசீரமைக்கப்படாமல் உள்ள கடற்தொழில் சங்கம், சமாசம் தொடர்பில் ஆராயந்ததுடன் , மீன்பிடி துறைமுகத்துக்கான தேவைப்பாடுகள் மற்றும் கடல் அலை தடுப்புக்கான கல்லணை அமைப்பு மற்றும் மீனவர்களின் பிரச்சினைகள்சம்பந்தமாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை திருத்தம் செய்யப்படும் நெடுந்தீவு மேற்கு வீதியினை பார்வையிட்டதுன் , அடுத்த வருட நிதி ஒதுக்கீட்டில் வெல்லை வீதிக்கு முன்னுரிமை கொடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
மேலும் நெடுந்தீவு வைத்தியசாலை மற்றும் பொலிஸ் நிலையம் என்பவற்றுக்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்ததுடன்,மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.