நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் நடமாடும் சேவைமூலம் சாரதி அனுமதிபத்திரத்திற்கான எழுத்துமூல பரீட்சையில் சித்தி எய்தியவர்களுக்கானசெயன்முறை பரீட்சை எதிர்வரும் ஜூலை 29 – செவ்வாய்க்கிழமை நெடுந்தீவில்இடம்பெறவுள்ளது.
தனியார் பயிலகம் ஊடாக பயிற்சிகள் தற்போது பெருக்கடி பிள்ளையார் ஆலயவளாகத்தில் இடம்பெறுகிறது. இன்றே பயிற்சிகளின் இறுதியான நாளுமாகும்.
இதுவரையில் பயிற்சிகளை/ ஒழுங்குகளை மேற்கொள்ளாதோர் இன்றேனும்அவ்விடத்திற்கு சென்று பயிற்சிகளை பெறமுடியும்.
இதேவேளை பயிற்சி பயிலகம் சாராது தமது சொந்த வாகனங்களில்செயன்முறை பரீட்சையில் தோற்றவுள்ளவர்கள் தமது பெயர்களை இன்று 12 மணிக்கு முன்பதாக கிராம அலுவலர்களிடம் வழங்குமாறுவேண்டப்படுகின்றீர்கள்.
அவ்வாறு தமது சொந்த வாகனங்களில் செயன்முறை பரீட்சையில்தோற்றவுள்ளவர்கள் தம்வசம் பின்வரும் ஆவணங்களை கொண்டிருத்தல்வேண்டும்
1.பயிற்சிகால வாகன காப்புறுதி
2.திணைக்களத்திடம் பரீட்சைக்கு விண்ணப்பம் செய்யப்பட்ட பத்திரம்
3.வாகன உரிமையாளர் சம்மத கடிதம்
4.Learner’s Permit