நெடுந்தீவு– குறிகட்டுவான் இடையேயான புதிய நேர அட்டவணையில்“அமிர்தினி” படகு சேவை நாளை(பெப். 17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாளைமுதல் வாரநாட்களில் தினமும் காலை 6.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் படகு குறிகாட்டுவானில் இருந்து மீண்டும் மாலை 5.00 மணிக்கு நெடுந்தீவை நோக்கி சேவையில் ஈடுபடவுள்ளது.
இதேவேளை சனிக்கிழமைகளில் குறிகாட்டுவானில் இருந்தான மாலை 5.00 மணி சேவையும் , ஞாயிற்றுகிழமைகளில் படகு சேவையும் இடம்பெறாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு கொடிவேல் அறிவாலயத்தின் இன்னெரு சேவையாக இப்படகு சேவை இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.