நெடுந்தீவு தென்கிழக்கில் அமைந்துள்ள அருள்மிகு முனியப்பர் ஆலயத்தின் வருடாந்த மகா திருக்குளிர்த்தி விழா நேற்றையதினம் திங்கட்கிழமை (ஜூலை 21) மாலை ஆரம்பமாகி பக்திபூர்வமாக சிறப்புடன் இடம்பெற்று இன்று (ஜூலை 22) காலை நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் , அன்னதானம்,திருக்குளிர்த்தி விழா, பொங்கல் விழா, மடைபரவல் ,சுவாமி வீதியுலா மற்றும் தீமிதிப்பு என்பவற்றுடன் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில் வழங்கல், மற்றும் ஏலவிற்பனை என்பன இடம்பெற்றமை சிறப்பாகும்.