நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து அடுத்தமாதம் முதல் ஆரம்பமாகும் என தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 60 கடல் மைல்கள் தொலைவில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்குக் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு கடல்சார் திணைக்களம், இந்திய மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை மற்றும் வெளியுறவுத் துறை மற்றும் தமிழக அரசு என்பன இணைந்து முன்னெடுக்கின்றன.
நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறன. அவை பத்து நாள்களுக்குள் நிறைவுபெற்றுவிடும். ஒக்ரோபர் மாதம் 15 ஆம் திகதிக்குள் கப்பல் சேவையை ஆரம்பிக்க முடியும் என்று எதிர்பார்க்கின்றோம் – என்றார்.