இலங்கையில் டிற்வா புயலினால் ஏற்பட்ட வெள்ள மற்றும் புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டின் அனைத்து பகுதியிலுமுள்ள மக்களுக்கு உதவும் வகையில் நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் – பிரித்தானியாவினால் உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது.
நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் – பிரித்தானியாவினால் £3,750.00 இற்கான காசோலை இலங்கை ரூபாவில் சுமார் 1.5 மில்லியன் நேற்று (18/12) லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் வைத்து இலங்கை உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டது.

நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் – பிரித்தானியா கிளையினரின் சிறப்பான செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.