தெல்லிப்பளை பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா இன்று(டிசம்பர் 8) மிகவும் சிறப்புற நடைபெற்றது.
பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவிற்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினரகாவும், யூனியன் கல்லூரி அதிபர் திரு தில்லையம்பலம் வரதன் அவர்கள் கௌரவ விருந்தினரகாவும் கலந்து சிறப்பித்தார்.
வலி வடக்கு மண்ணின் தனித் தன்மையினை வெளிப்படுத்திய கலைப் படைப்புக்கள் இன்றைய எமது நிகழ்வினை சிறப்பித்தன.
இதேவேளை வலி வடக்கு மண்ணும் , வாழும் மக்களின் தனித்துவமான எண்ணங்களும் சிந்தனைகளும் பல அற்புதமான கலைஞர்களையும் அறிஞர்களையும் உருவாக்கியுள்ளது என்பது இன்றைய நிகழ்வு நிரூபித்துள்ளமை குறுப்பிடத்தக்கதாகும்.