திடீர் தாக்குதலை ஆரம்பித்துள்ள இஸ்ரேல்  – காசாவில் நிலவும் பதற்றம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இஸ்ரேலிய இராணுவம் ரஃபாவிலும் தெற்கு காசாவின் பிற இடங்களிலும் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலைமை குறித்து நெதன்யாகுவுக்கும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸுக்கும் இடையே தொலைபேசி அழைப்பு நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் உறுப்பினர்களுடன் நடந்த “துப்பாக்கிச் சண்டைக்குப்” பிறகு இந்த தாக்குதல் நடந்ததாக இஸ்ரேலின் பொது ஒளிபரப்பாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கு காசாவின் ஜபாலியாவில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் இரண்டு பலஸ்தீனியர்கள்  பலியாகியுள்ளதுடன் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

“ஆபத்தான சூழ்நிலை காரணமாக நோயாளர் காவு வண்டி குழுவினரால் அந்தப் பகுதியை அடைய முடியவில்லை” என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்ததாக அறிக்கை மேற்கோளிட்டு காட்டப்பட்டுள்ளது.

Share this Article