குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் ஏற்பட்ட முறுகலைஅடுத்து, அவரது தேர்தல் பிரசார நிதியாளராக செயற்பட்ட எலோன் மஸ்க் புதியஅரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
விண்வெளி மற்றும் வாகனத்துறையில் கோடீஸ்வரரான மஸ்க், ட்ரம்பின் “Big Beautiful Bill” வரி யோசனைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதுடன் இந்தயோசனை, அமெரிக்காவை திவாலாக்கும் என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் ஜனநாயக்கட்சி மற்றும் குடியரசுக்கட்சி என்பதற்கு பதிலாகஅமெரிக்காவில் புதிய கட்சி ஒன்று அவசியம் என்ற கருத்தையும் அவர்வெளியிட்டிருந்தார். இந்த கருத்துக்கு மத்தியிலேயே அவர் தற்போது புதிய கட்சிதொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கக் கட்சி என்ற பெயரில் இந்த புதிய அரசியல் கட்சியைஉருவாக்கியுள்ளதாக அவர் தற்போது அறிவித்துள்ளார்.
இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பித் தர அமெரிக்கக் கட்சிஉருவாக்கப்பட்டது என்று அவர் தமது சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.