சீனா தவிர இலங்கை நாடுகளுக்கு வரி விதிப்பு 90 நாட்கள் இடைநிறுத்தம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு கடந்த ஏப்ரல் 2ஆம் திகதிஅமெரிக்கா அறிவித்த புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்திவைக்க தீர்மானித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு உடன்அமுலுக்கு வரும் வகையில் 125 வீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

சீனாவைத் தவிர, அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் தற்போது 10% உலகளாவிய வரி விதிக்கப்படும் என வௌ்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதிசெய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை இரட்டிப்பாக்கியதைத் தொடர்ந்துஅதற்கு பதிலடி வழங்கும் வகையில் சீனா இன்று அமெரிக்க பொருட்களுக்கு 84 வீத வரி விதிப்பை அமுல்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காசீன பொருட்களுக்கான வரியை 125 வீதமாக அதிகரித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Share this Article