கிளிநொச்சி இராணுவ முகாமில் இணைக்கப்பட்டிருந்த சிப்பாய் ஒருவர் கஞ்சாவைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டார். குறித்த சிப்பாய்விடுமுறையில் முகாமில் இருந்து வெளியேற முற்பட்ட போதே இந்தக் கைதுஇடம்பெற்றது.
சக இராணுவ வீரர்களால் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனையின் போது, சுமார் 20 கிராம் கஞ்சா அவரது உடைமையில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, சந்தேகநபர் இராணுவத்தினரால் காவலில் எடுக்கப்பட்டுமேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் ஊழல் தடுப்புப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.