நெடுந்தீவு சென் ஜோவான் கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள்நிறைவு விழா கடந்த வெள்ளிக்கிழமை (பெப்.14) கல்வி நிலைய வளாகத்தில்சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு சைவப்பிரகாசா வித்தியாலய பிரதி அதிபரும் கத்தோலிக்க ஆசிரியர்சங்கத்தின் மூத்த ஆசிரியருமான அ. பீலிக்ஸ் ஜேக்கப் தலைமையில் நிகழ்வுகள்இடம்பெற்றன.
நிகழ்வின் பிரதம அதிதியாக கிளரீசிய துறவறசபையின் அருட்பணியாளர் அருட்பணி அ.அபிலஸ் அடிகளார் கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக
நெடுந்தீவு மகா வித்தியாலய ஆசிரியர் அருட்பணி சோபன் றூபஸ் அடிகளார், றோ.க.மகளிர் கல்லூரி முதல்வர் மற்றும் நெடுந்தீவு திருக்குடும்ப கன்னியர்மடமுதல்வர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
புனித யோவான் கல்வி நிலைய 4ம் வருட நிறைவு விழாவை முன்னிட்டு புலம்பெயர்உறவுகளின் அனுசரையுடன் க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தி பெற்றமாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகைகளும் மற்றும் மாணவர்களுக்கானசீருடைகளும் இதன்போது வழங்கப்பட்டன.
நிகழ்வில் கல்வி நிலையத்தின் மாணவர்கள் பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.